Contact/ தொடர்பு கொள்க

மூளையும் வயிறும்

வயிற்றுக்கும் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்புகள் மிக சுவாரஸ்யமானவை. அவற்றுக்கு ஒரு சிறிய அறிமுகமாக பிரகாஷ் சங்கரனின் கட்டுரை இருக்கிறது-

"ஒரு குறிப்பிட்ட வகை லாக்டோபாஸில்லஸ் (Lactobacillus rhamnosus JB-1 ) என்னும் பாக்டீரியா செலுத்தப்பட்ட எலிகளில் குறிப்பிடத்தக்க அளவு மன அழுத்தம், சோர்வு தொடர்பான நடத்தைகள் குறைந்தது, மேலும் மன அழுத்தத்தினால் அதிகரிக்கும் ‘கார்டிகோஸ்டீரோன்’ போன்ற ஹார்மோன்களின் அளவும் குறைந்தது. இந்த ஆராய்ச்சி மூலம் சில குடல்வாழ் நுண்ணுயிர்கள் எந்த வினைப்பாதையின் மூலம் மூளையின் வேதிச்செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"